இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திருகோணமலையில்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா.மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து திருகோணமலை இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை இன்று சனிக்கிழமை திறந்து வைத்தனர்.

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில் எரிபொருள் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது கருத்துரைத்த சந்தோஷ் ஜா

“இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவுக்கு பாரிய பங்கு காணப்படுகின்றது. அதில் பலதரப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கிழக்கினை அபிவிருத்தி செய்ய குறிப்பாக திருகோணமலைக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு அதனூடாக பல வேலைவாய்ப்புக்களை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளோம்

இந்தியாவுக்கும் திருகோணமலைக்கும் நேரடி தொடர்பினை உருவாக்கும் நோக்கில் நேரடி எண்ணெய்க் குழாய்மூலம் இரு நாடுகளையும் இணைக்கும் செயற்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin