மின் கட்டண திருத்தத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத் தெரிவித்தார்.
”மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறுவது என்ற கொள்கை முடிவை அரசாங்கம் எட்டியுள்ளது.
நீர், சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் பெரும் பங்களிப்பைச் செய்கின்றன.
10 மெகாவாட்டிற்கு குறைவான காற்றாலை அல்லது சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை விரைவாகப் பெற மின்சாரத் திணைக்களம் மற்றும் சூரிய சக்தி ஆணையம் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
விரைவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பெற முடியாவிட்டால், எதிர்காலத்தில் மின் நெருக்கடிகள் உருவாகலாம்.
மின் உற்பத்தி நிலையங்களை விரைவுபடுத்துவதற்கான புதிய திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளோம். சோலார் பேனல் திட்டங்களும் ஆரம்பின்னக்கட்டுள்ளன. இதனால் விரைவில் மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. அது மக்கள் உணரக்கூடிய வகையிலான குறைப்பாக இருக்கும்.” எனவும் இந்திக்க அனுருத்த ஹேரத் கூறினார்.