எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலு பேருந்து கட்டண திருத்தத்திற்கு இந்த விலை குறைப்பு போதாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம், அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தின் தொகையை கணக்கிட முடியாது.
அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் சில்லறை விலையை 30 ரூபாவால் குறைத்துள்ளது.
கடந்த மாதங்களில், ஒரு லிட்டர் டீசலுக்கு 27 ரூபா நஷ்டம் ஏற்படும் நிலையிலேயே நாங்கள் சேவையை வழங்கினோம்.
இந்நிலையில், வருடாந்த கட்டண திருத்தத்தை கணக்கிடும் போது ஜூலை மாதத்தில் பேருந்து கட்டண திருத்தம் குறித்து பரிசீலிக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.