புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னருக்கு வழங்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த வாரம் முதல் மன்னர் மூன்றாம் சார்ளஸ் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என பக்கிங்ஹாம் அரண்மனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வரும் மன்னர், தனது பொது பணிகளையும் தொடங்குவார் என அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள மன்னர் பெரும் ஊக்கம் பெற்றுள்ளதாகவும், இது மிகவும் நம்பிக்கையான செய்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புற்றுநோய்க்கான சிகிச்சைகள் தொடர்வதாகவும், சிகிச்சை முடிவுபெறும் நாள் எதுவும் குறிக்கப்படவில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மன்னருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயின் வகை வெளியிடப்படவில்லை, ஆனால் மன்னருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் குழு “இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்” குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும், சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையின்படி முடிவுகள் எடுக்கப்படும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.