மாலைத்தீவில் நாடாளுமன்ற தேர்தல்

மாலைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஞாயிற்றுக்கிழமை (21) ஆரம்பமாகின.

மாலத்தீவில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 17 ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டது.

தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு மாலைத்தீவு ஜனாதிபதி முகமது மூயிஸ் அனுமதியளித்தையடுத்து இன்று தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்து.

சீன ஆதரவாளர் என கூறப்படும் தற்போதைய மாலைத்தீவு ஜனாதிபதியான முகமது மூயிஸ் இந்தியாவுடன் சுமுகமான உறவை கொண்டிராதவர்.

“தான் ஆட்சிக்கு வந்தால் மாலைத்தீவில் இருந்து இந்திய இராணுவ வீரர்களை விரட்டியடிப்பேன்” என தேர்தல் பிரச்சாரங்களிலும் அவர் கூறியிருக்கின்றார்.

இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாக பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin