இஸ்ரேல்-ஈரான் மோதல் மசகு எண்ணெய் விலையில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளது.
இஸ்ரேல் லிபியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது மேற்கொண்ட தாக்குதலில் இராணுவ தளபதிகள் உட்பட பதின்மூன்று பேர் உயிரிழந்தனர்.
பதில்தாக்குதலாக ஈரான் சுமார் 300 ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடாத்தியது.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.
இதன் விளைவாக மசகு எண்ணெய் விலை கடந்த வெள்ளிக்கிழமை 03 வீதத்திற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினமும்,உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.14 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.752 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.