உலக மக்களால் விரும்பப்படும் TikTok

உலகளாவிய ரீதியில் அனைவராலும் விரும்பப்பட்டு வரும் ஒரு செயலியாக TikTokஐ கருதலாம்.

TikTokஐ பல வழிகளில் பயன்படுத்துபவர்கள் உள்ளனர்.

ஆனால் இந்த செயலியை பயன்படுத்தும் அனைவரும் சரியாக பயன்படுத்துகிறார்களா?

TikTokஇன் செயல்திறனில் அதிக கவனம் செலுத்திய நாடுகளில் மலேசியாவும் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, செயலியில் புழக்கத்தில் இருக்கும் அநாவசிய உள்ளடக்கத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்த உறுதியான திட்டத்தை வழங்குமாறு டிக்டோக்கிற்கு மலேசிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இனம், மதம் மற்றும் அரசமரபு தொடர்பான முக்கிய விடயங்கள் விசேடமானவை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் “தீங்கு விளைவிக்கும்” சமூக ஊடக உள்ளடக்கம் குறித்து 51,638 புகார்கள் கிடைத்துள்ளதாக மலேசியாவின் நிகழ்நிலை தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டில் கிடைக்கப்பட்ட இத்தகைய புகார்களின் எண்ணிக்கை 43,000 ஆகும்.

இருப்பினும், ByeDance என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான TikTok மூலம் சீன அரசாங்கம் தரவுகளைப் பெற்றுக்கொள்வதாக பல நாடுகள் குற்றம் சாட்டின.

மேலும், TikTok தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சில நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

Recommended For You

About the Author: admin