பிரித்தானியாவில் 28 வயதான நபர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்து 224 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் சுற்றி ஆற்றில் வீசியுள்ளார்.
இந்தக் கொலையை ஒப்புக்கொண்டதுடன் அவருக்கான தண்டனை நாளை (8 ஆம் திகதி) அறிவிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2023 மார்ச் 25 ஆம் திகதி 26 வயதான ஹாலி பிராம்லியின் எச்சங்கள் லிங்கன்ஷையரில் உள்ள பாசிங்ஹாமில் உள்ள விதம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன.
குறித்த பெண் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட எட்டு நாட்களுக்குப் பிறகு எச்சங்கள் கட்டுப்பிடிக்கப்பட்டன.
பொலிஸாரின் கூற்றுப்படி, லிங்கன் நகரத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் மெட்சன் என அடையாளம் காணப்பட்ட 28 வயதான குற்றம் சாட்டப்பட்டவர், முன்பு தனது மனைவியைக் கொலை செய்ததை மறுத்துள்ளார்.
எனினும், ஜோசுவா ஹான்காக் (28) என்ற இரண்டாவது நபர் சடலத்தை அப்புறப்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரவுன் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தண்டனை விசாரணையின் போது, ஹான்காக் மெட்சனின் நண்பர் என்பதும், கொலைக்குப் பிறகு சுமார் ஒரு வார காலம் மறைத்து வைத்திருந்த எச்சங்களை அப்புறப்படுத்த பணம் கொடுத்தார் என்பதும் தெரியவந்தது.
எவ்வாறாயினும், மனைவியை கொலை செய்தமைக்கான காரணத்தை மெட்சன் வெளிப்படுத்தவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.
2021 இல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியினர், லிங்கனில் உள்ள அவர்களது குடியிருப்பில் வைத்து கத்தியால் குத்தி கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்சன் விலங்குகளை கொடுமைப்படுத்திய பின்னணியை கொண்டுள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாய்க்குட்டி உள்ளிட்ட செல்லப்பிராணிகளை கொலைசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைக்குப் பிறகு, மெட்சன் தனது மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து 50 பவுண்டுகளை எடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.