இலங்கை – வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.
இன்றைய வேகமான உலகில் மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் பங்களிக்கும் பொழுதுபோக்குகளைக் கண்டு ரசிப்பது அவசியம்.
சாகத்தினை விரும்பாதவர்கள் மிகவும் குறைவே.
மனிதர்கள் சகசம் செய்தாலே ஆச்சரியமாக பார்க்கும் நமக்கு விலங்குகளின் சாகசங்கள் எப்போதும் விருந்து கொடுக்கும்.
வவுனியா, நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற சித்திரை கலை விழா நிகழ்வின் போது சாகச நிகழ்வு இடம்பெற்றது.
கண்டியில் இருந்து கொண்டு அழைத்து வரப்பட்ட பயிற்றப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்கள், இராட்டினத்தில் சுற்றுதல், தலையில் நீர் கொண்டு செல்லல், சிறுவர்களை இராட்டினத்தில் ஏற்றி சுற்றுதல், மோட்டர் சைக்கிளில் பயணித்தல், வளையத்தின் ஊடாக பாய்தல், நெருப்பு வளையத்தின் ஊடாக பாய்தல், துப்பாக்கி சூடு நடத்தியரை விரட்டிப் பிடித்தல் போன்ற பல சாகச நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தன.
தமிழர் அதிகம் வாழும் வவுனியாவில் இப்படி ஒரு சாகச நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
மேலும், மோப்ப நாய்களின் சாகசத்தை பார்பதற்காக மக்கள் பலரும் வருகை தந்திருந்தனர். இந்நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.