இலங்கை நோக்கி பயணித்த போது அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதிய “டாலி” கப்பலில் காணப்பட்ட 56 கொள்கலன்களில் 764 டன் அபாயகரமான பொருட்கள் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
984 அடி நீளம் கொண்ட கப்பலில் நச்சுப் பொருட்கள் அடங்கிய 56 கொள்கலன்களில் வெடிபொருட்கள் மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய அபாயகரமான பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் போது, 14 கொள்கலன்கள் படாப்ஸ்கோ ஆற்றில் விழுந்ததால், ஆற்றில் தண்ணீரில் தர பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலின் ஏனைய 4,644 கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அறிய, கப்பலின் சரக்கு பதிவேடு இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
பால்டிமோருக்கு முன், டாலி கப்பல் நியூ யோர்க் மற்றும் நோர்போக், வர்ஜீனியா ஆகிய இடங்களுக்குச் சென்றது, இது உலகின் மிகப்பெரிய கடற்படைத் தளமாக இருந்த நிலையில் அதன் அடுத்த நிறுத்தம் கொழும்பு துறைமுகமாகும்.
அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் குறித்த விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள தண்ணீரை ‘டைவர்ஸுக்கு பாதுகாப்பற்றது’ என அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த உத்தரவை வழங்கியது யார் என்பது இதுவரை வெளிவரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது