அன்பு உயிர்தெழும் நாளுக்காக நாம் காத்திருக்கிறோம்

மனிதர்களிலுள்ள இருண்ட சக்திகளை அகற்றி, நல்ல நம்பிக்கைகளைத் தந்து, நம் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிறிஸ்துவின் அன்பான சக்தியை உலகுக்கு அறிவிக்கும் நாள் என்று ‘ஈஸ்டர் தினத்தை’ அழைக்கலாம்.
சமூக நீதிக்காகவும் மனித நேயத்திற்காகவும் தனது இன்னுயிரை தியாகம் செய்த இயேசு அந்த மரணத்தை வென்று மீண்டும் உயிர்த்தெழுந்து உலகிற்கு கொண்டு வந்த விடுதலை செய்தியை நினைவுகூரும் ஈஸ்டர் தினத்தில், நம்பிக்கை மற்றும் விடுதலை மூலம் இருளையும் விரக்தியையும் நீக்கும் செய்தி உலகத்திற்கே கொண்டு செல்லப்படுகிறது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர், ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் 03 தேவாலயங்கள் உட்பட 08 இடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான குண்டுத் தாக்குதலில் உயிரையும், குடும்பத்தையும், உறவினர்களையும் இழந்த வேதனையை மறக்க முடியாது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவோம் என்று ஆட்சிக்கு வந்த கட்சி கூறி 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த நீதியும் கிடைக்காததால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் அன்புக்குரியவர்களை இழந்த வேதனையை மறக்க முடியாது.
அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அது எங்களின் ஒரே இலட்சியம்.
மத நம்பிக்கையும், அன்பும் விதைக்கப்பட்ட இடத்தில் பாவத்தை கொண்டு வந்த மனிதாபிமானமற்றவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும், அன்பு மீண்டும் ஒரு நாள் உயிர்த்தெழும் என்பது எமது நம்பிக்கை.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் ஈஸ்டர் நல்வாழ்த்துக்கள்.

Recommended For You

About the Author: admin