உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பால் பாகிஸ்தானில் மீண்டும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் சூழ்நிலைகள் உருவாகியுள்ளதுடன், இங்கு பெற்றோல் விலையும் கணிசமாக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, பாகிஸ்தானில் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் உயர்த்தப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் நெருக்கடிகள் மற்றும் ஆட்சி மாற்றம் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது.
அத்துடன் ரஷ்ய – உக்ரைன் போரும் உலகளவில் எரிபொருள் விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பொருட்களில் விலை உயர்வால் ஏற்பட்ட பொருளாதார அவல நிலை நிலைகளை சமூக வலைத்தளங்களில் காணமுடிந்தது.
பெரும்பாலான காணொளிகளில் மக்கள் கோதுமை மாவு மற்றும் ரொட்டிக்காக ஒருவருக்கொருவர் சண்டையிடும் அளவிற்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.
தெற்காசியாவில் பொருளாதாரத்தில் வலுவற்ற நாடாகப் பாகிஸ்தான் உள்ளதாக உலக வங்கி அறிவித்திருந்தது.
பாகிஸ்தான் தற்போது வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளதோடு அங்கு பணவீக்கமும் உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது பெற்றோல் விலை உயர்வால் பாகிஸ்தான் புதிய சுமையை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்தமாதம்தான் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற்றதுடன், இதில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்திருக்கவில்லை.
இதனால் ஷெபாப் ஷெரிப் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கமொன்றே அமைக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்து.