தைவானின் கடற்படைத் தலைவர் டாங் ஹுவா, அடுத்த வாரம் அமெரிக்காவுக்குச் சென்று இராணுவ நிகழ்வொன்றில் கலந்து கொள்ள உள்ளார்.
இருதரப்பு கடற்படை ஒத்துழைப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து இதன்போது டாங் ஹுவா ஆலோசிக்க உள்ளதாக தைவான் அறிவித்துள்ளது.
தைவானும் அமெரிக்காவும் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறது. என்றாலும், அது அதிகாரப்பூர்வமற்ற உறவாக உள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகளை
தைவான் விவகாரத்தில் அமெரிக்காவை தவிர வேறு நாடுகள் பாரிய அளவில் அழுத்தம் கொடுப்பதாக இல்லை. காரணம், தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கொண்டாடி வருவதுடன், தைவானின் சர்வதேச நகர்வுகளுக்கு தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் அமெரிக்கா சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை பேணுகிறது. இதனால், அமெரிக்காவின் அறிவிப்புகள் வெறும் வெற்று அறிவிப்புகளாகவும் தென் சீனக் கடலில் தொடர்ச்சியான பதற்றத்தை அமெரிக்கா விரும்புவதால் தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செயல்பாடுகளை அதிகரிக்க நீண்டகால முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.
தைவான் உடனான “இராணுவ கூட்டுறவை” எதிர்க்கிறோம்
என்றாலும், சீனாவின் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளைால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவால் தனது செல்வாக்கை நிலைநிறுத்த முடியாதுள்ளது.
இதனால்தான் தைவானை தமது தேவைக்கு அமெரிக்கா பயன்படுத்திக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், டாங் ஹுவாவின் அமெரிக்க பயணம் சீனாவை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. அதனால், தைவான் சீனாவிடமிருந்து பல நெருக்கடிகளை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையிலான “இராணுவ கூட்டுறவை” உறுதியாக எதிர்க்கிறோம்.
வாஷிங்டன் “தைவான் விவகாரத்தில் எதிரான சக்திகளுக்கு தவறான சமிக்ஞையை அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா பெய்ஜிங்குடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தியதால் வாஷிங்டனுக்கும் தைபேக்கும் உத்தியோகபூர்வ இராஜதந்திர அல்லது இராணுவ உறவுகள் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.