சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு காட்டம்

காசாவில் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களை வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக தென்னாபிரிக்கா குற்றம் சுமத்தியுள்ள நிலையில் சர்வதேச நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகப்பெரிய அவலத்தை எதிர்நோக்கியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் மோதல் பகுதிகளில் வறுமை அதிகரித்துவருவதாகவும், இதனால் சிறுவர்கள், வயோதிபர்கள் பெண்கள் ஆகியோர் வெகுவாக பதிப்படைந்துள்ளதாகவும் நீதிபதிகள் விபரித்துள்ளனர்.

இந்தநிலையில் மனித அவலத்தை கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக போர் நிறுத்தம் அவசியம் என ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையிலான ஆயுத மோதலானது காசாவின் அல் சிபா வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் இடம்பெறுவதாக சர்வதேச நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனால் பாரிய மனித அவலம் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாட் அமைப்பினர் இஸ்ரேலிய படையினர் மீது ரொக்கெட் மற்றும் மோட்டர் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை, காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என பாதுகாப்புச் சபையில் வாக்களிப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin