சீனா இணையவழி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இணையவழி ஊடுறுவல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,கல்விமான்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் பாதிப்படைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சீனாவின் இணையவழி ஊடுறுவலானது ஏபிரி31 (APT31) என்ற புனை பெயரில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.அந்த அமைப்பு சீன பாதுகாப்பு அமைச்சின் ஒரு அங்கம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளை மாளிகையின் அதிகாரிகள், செனட் சபை உறுப்பினர்கள், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச அமைப்புக்களின் அதிகாரிகள் எனப் பலரும் சீனாவின் இணையவழி ஊடுறுவலைக் கண்டித்துள்ளனர்.