பங்களாதேஷிற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று சோமாலிய கடல் கொள்ளையர்களினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடலில் மேற்குப் பகுதியில் சோமாலிய கொள்ளையர் குறித்த கப்பலை வழிமறித்துள்ளனர்.
அதிவேக படகில் குறித்த கப்பலை நோக்கிப் பயணித்த கடல்கொள்ளையர்கள், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கப்பலின் கெப்டன் மற்றும் இரண்டாம்தர அதிகாரி ஆகியோரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதாக குறித்த கப்பலின் பிரதம அதிகாரி ஆதிக் உல் கான் (Atiq Ullah Khan) கப்பல் உரிமையாளருக்கு குரல்ப்பதிவு ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இதேவேளை கெப்டனை மீட்கும் பணியினை கப்பல் உரிமையாளர் தொடங்கியுள்ளார்.