சூடானில் எதிர்வரும் மாதங்களில் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் பட்டினினை எதிர்நோக்குவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டின் பல பகுதியைச் சேர்ந்த மக்கள் கொடூர பட்டினியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண உதவிகளுக்கான தலைவர் மார்டீன் கிறிபித்ஸ்(Martin Griffiths) பாதுகாப்பு சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதல் நடவடிக்கை காரணமாக நாட்டின் விவசாய உற்பத்திகளில் ஏற்பாட்ட பாதிப்புக் காரணமாக இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போர் மோதல் காரணமாக உட்கட்டமைப்பு வசதிகளில் பாதிப்பு,கால்நடைகளின் அழிவு,வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு,பொருட்களின் விலை அதிகரிப்பு, மேலும் அதிகரித்த மக்கள் இடம்பெயர்வு காரணமாக பாரிய மனித அவலம் ஒன்று சூடானின் ஏற்பட்டிருப்பதாக மார்டீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.