ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னி சிறையில் மரணமடைந்த நிலையில், எதிர்க்கட்சியின் பலம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை புட்டினின் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பும் அழுத்தமும் குறைவடைந்துள்ளதாகவும் தெரியக்கிடைக்கின்றது.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் ஆட்சிக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பவர்கள் மற்றும் செயற்படுபவர்கள் நாடு கடத்தப்படுகின்றனர் அல்லது படுகொலை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அதில் வெற்றி பெறும் நோக்கத்துடன் புட்டின் காய்களை நகர்த்திவரும் நிலையில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாமையானது அவரது வெற்றிக்கு வாய்ப்பாக அமையும் என குறிப்பிடப்படுகின்றது.
அலக்ஸி நவல்னி ஆதரவாளர்கள் ரஷ்ய ஆட்சியாளர்களுக்கு எதிராக வாக்களிப்பர்கள் என நம்பப்படுகின்றது.