யாழிலிருந்து வவுனியாவுக்கு வாகன பேரணி: சட்டத்தரணி சுகாஸ்

அனைவருக்காகவும் இன்று எட்டு அப்பாவி உறவுகள் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளாதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள், கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை காலை 07.30 மணிக்கு யாழ். நல்லூர் ஆலய முன்றலில் இருந்து வவுனியாவுக்கு வாகன பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

கைது செய்யப்பட்டவர்கள் ஒரு குற்றமும் செய்யாதவர்கள். இவர்கள் செய்த பெரிய குற்றம் வெடுக்குநாறி மலைக்கு போனதுதான். “ ஓம் நமச்சிவாய“ என கூறி, பூஜை செய்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றார்களே தவிர வேறெதற்காகவும் இல்லை.

இதனால், இவர்கள் தொல்லியல் சட்டத்தை மீறியதாக அவர்களை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த சம்பவத்தை நாம் கண்டுகொள்ளவில்லை என்றால், நாளை வடகிழக்கு எங்கும் தொல்லியல் சட்டம் என கூறி அனைத்து பிரதேசங்களையும் ஆக்கிரமிக்ககூடும் ஆகவே அனைவரையும் குறித்த பேரணியில் கலந்துகொள்ள வருமாறு பகிரங்க அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin