அமெரிக்காவின் சதிவலையில் சிக்கிய கோட்டாவின் சகாக்கள்

இலங்கைத் தீவில் முதல் முறையாக பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.

கோட்டா ஜனாதிபதியானது வெறுமனே ஒரு சம்பவம் அல்ல. கடும்போக்குவாத சிங்கள மன்னர் ஒருவரை மீண்டும் பதவியில் அமர்த்தியது போல் சிங்கள கடும்போக்குவாத அமைப்புகளும் பேரினவாதிகளும் கொண்டாடினர்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களால் வலுவடைந்த முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு கோட்டாவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்த பெரும் பங்காற்றியது.

இலங்கைத் தீவின் அடுத்த ஒரு தசாப்தகாலத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக கோட்டாபயவே இருப்பார் என 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சிங்கள கடும்போக்குவாத அமைப்புகள் தற்பெருமை பேசின.

ராஜபக்சர்கள் அதிருப்தியில்

கொவிட் நெருக்கடியை முறையாக நிர்வகித்துக்கொள்ள முடியாத நபராகவும், இலங்கைத் தீவுக்கு உகந்த பொருளாதார கொள்கைகளை வகுக்க முடியாத நபராகவும் கோட்டா உருவானார்.

கோட்டாவை சுற்றியிருந்த குறிப்பிட்ட சிலரின் பேச்சுகளை மாத்திரமே அவர் கோட்டு செயல்படுவதாக ஒருகட்டத்தில் ராஜபக்சர்கள்கூட குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கோட்டா தாம் எவ்வாறு பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்பது தொடர்பில் புத்தகமொன்றை எழுத்தியிருந்ததுடன், அதனை கடந்தவாரம் வெளியிட்டும் இருந்தார்.

இந்தப் புத்தகத்தில் அவர் கூறியுள்ள சில விடயங்கள் தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக இந்த புத்தகத்தில் கூறியுள்ள விடயங்களால் ராஜபக்சர்களே அதிருப்தியில் இருக்கின்றனர்.

கோட்டாவின் புத்தகம் தொடர்பில் நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்டுள்ள ராஜபக்சர்களின் நெருங்கிய நண்பரும், உறவினரும், உக்ரைனுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க,

அமெரிக்காவின் சதிவலையில்தான் தாம் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்பதை மறைமுகமாக கோட்டா கூறியுள்ளார். அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில், நேரடியாக எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

கோட்டாவின் அருக்கில் இருந்த கமல் குணரத்ன, சவேந்திர சில்வா, பி.பி.ஜயசுந்தர, லலித் வீரதுங்க, ஜயநாத் கொலம்பகே, மலிந்த மொரகொட, நிசங்க சேனாதிபதி ஆகியோர் அமெரிக்காவின் சதிவலையில் சிக்கினர்.

இவர்கள் கூறியதையே கோட்டாவும் கோட்டு செயல்பட்டார். இவர்கள் அனைவரும் தான் கோட்டாவை கஷ்டத்தில் தள்ளினர்.

மஹிந்த, பசில், சமாலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்று கோட்டாவுக்கு எந்தவொரு தேவையும் இருக்கவில்லை.

கோட்டாவின் கடமை முடிந்துவிட்டது

ராஜபக்சர்களுக்கு இடையிலும் விரிசல்களை ஏற்படுத்தியதற்கு இவர்கள்தான் பொறுப்புக்கூற வேண்டும். கோட்டாவை தனிமைப்படுத்துவதே இவர்களது இலக்காக இருந்தது.

கோட்டா ஜனாதிபதி பதவியை துறக்க இரண்டு மாதங்களுக்கு முன்னர் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில், இன்னும் இரண்டு மாதங்களில் கோட்டா பதவியை விட்டு செல்ல வேண்டும், இது சர்வதேச சதி, கோட்டாவின் கடமை முடிந்துவிட்டது என எச்சரித்திருந்தேன்.

அதனைதான் இன்று கோட்டாவும் தமது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

சவேந்திர சில்வா மற்றும் கமல் குணரத்ன தொடர்பிலான சில உண்மைகளை கோட்டா இந்த புத்தகத்தில் வெளியிடவில்லை. அமெரிக்கா மீதான பயத்தின் காரணமாகவே அவர் சில உண்மைகளை இதில் வெளியிடவில்லை.” என்றார்.

Recommended For You

About the Author: admin