சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்ட ஐவர் பலி

காணாமல் போன ஆறு பனிச்சறுக்கு வீரர்களில் ஐந்து பேர் சுவிட்சர்லாந்தில் இறந்து கிடந்தனர்

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கலின் போது காணாமல் போன ஆறு பேரில் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போயுள்ள மற்றுமொரு பனிச்சறுக்கு வீரரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்துக்கும் இத்தாலிக்கும் இடையிலான எல்லையில் Zermatt-Arolla பாதையில் உள்ள Tete Blanche மலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த ஐந்து பேரும், Fribourg மாகாணத்தைச் சேர்ந்தவர் ஒருவரும் கடந்த சனிக்கிழமை பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

Tête Blanche செக்டாரில் இவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மீட்கப்பட்டவர்களின் அடையாளம் வெளியிடவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Zermatt-Arolla பகுதிக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin