உக்ரெய்னுடன் சமாதான பேச்சுக்களில் ஈடுபடுமாறு பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் விடுத்த கோரிக்கையினை ரஷ்யா நிராகரித்துள்ளது.
மேலும் உக்ரெய்னின் ஜனாதிபதி செலன்ஸ்கியிடம் தாம் சரணாகதி அடையமாட்டோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோதலில் ஈடுபடும் தரப்புக்களில் ஒருதரப்பு மிகவும் மோசமான பாதிப்பை அடையும் போது மற்றைய தரப்பு சமாதானத்தில் ஈடுபட்டு பாதிப்பை குறைக்க வேண்டும் என பாப்பரசர் குறிப்பிட்டுள்ளார்.
சமாதானத்திற்கு தரப்பினர் வெள்ளைக் கொடியினை பயன்படுத்த வேண்டும் என்று பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
பாப்பரசரின் ஊடக நேர்காணலில் உக்ரெய்ன் தொடர்பில் ஆழ்ந்த அவதானிப்பை வெளியிட்டிருந்தார்.