புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு காசா பகுதியில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தும் மூன்றாம் கட்டபேச்சுவார்த்தைக்காக எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தரப்பு தங்கியுள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகின்றது.
பேச்சுவாரை்த்தைகளின் பிரகாரம் நாற்பது நாட்களுக்கு எதிர்பார்க்கப்படும் யுத்த நிறுத்த காலப்பகுதியில், இருதரப்பினரும் பணயக் கைதிகளை பரிமாற்றிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் காசாப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளவந்து குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர்களுக்கான உதவிகள் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புனித ரமழான் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.