ஏன் நான் பண்ணமாட்டேனா ? ரஜினி சொன்ன விஷயம்..!

கடந்த ஓரிரு வாரங்களாக கமலின் குணா திரைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் படமாக இருக்கின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தான். சிதம்பரம் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

கமல்ஹாசனின் குணா திரைப்படத்தின் மூலம் ஏற்பட்ட தாக்கத்தால் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சிதம்பரம். குணா குகைக்குள் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் பற்றியும், அவர்கள் எப்படி அங்கிருந்து மீட்கப்படுகின்றனர் என்பது பற்றியும் பேசும்படமாக உருவாகியுள்ளது இந்த மஞ்சுமெல் பாய்ஸ்

இப்படம் வந்த பிறகு தான் கமலின் குணா திரைப்படத்தின் மகிமையை பலர் தெரிந்துகொள்கின்றனர். பொதுவாக கமலின் பல படங்கள் வெளியான சமயத்தில் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் காலம் கடந்தும் போற்றப்படும் ஒரு படைப்பாக இருந்து வரும். அதைப்போல தான் குணா திரைப்படம். சந்தானபாரதி இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் 1991 ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது.

அதே தினத்தில் மணிரத்னத்தின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவான தளபதி திரைப்படமும் வெளியானது. மணிரத்னம் – ரஜினி – மம்மூட்டி கூட்டணியில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. 1991 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான குணா மற்றும் தளபதி என இரு படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தளபதி திரைப்படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான சந்தானபாரதி குணா திரைப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி சொன்ன விஷயம் பற்றி பகிர்ந்துள்ளார். குணா திரைப்படத்தை பார்த்துவிட்டு கமலின் அசந்துபோய்விட்டாராம் ரஜினி. கமலின் நடிப்பையும், கதைக்களத்தையும் வெகுவாக பாராட்டிய ரஜினி இயக்குனர் சந்தானபாரதியிடம், ஏன் குணா மாதிரி ஒரு திரைப்படத்தில் நான் லாம் நடிக்கமாட்டேனா ? என விளையாட்டாக கேட்டாராம்.

இதுபோல ஒரு படத்தில் நடிக்க ரஜினி ஆசைபட்டாராம். இதனை இயக்குனர் சந்தானபாரதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார். இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்த பிறகு குணா திரைப்படத்தை பார்க்காத ஒரு சிலர் அப்படத்தை தேடி போய் பார்த்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin