வற் வரியைக் குறைக்க தீர்மானம்?

நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் 18 வீத வற் (VAT) வரியை 15 வீதமாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிதி அமைச்சும் மத்திய வங்கியும் இணைந்து திட்டங்களை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எரிபொருள், மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏப்ரல் மாதத்தில் குறையக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரிசியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தென் மாகாண அரிசி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 20 ரூபாவினால் குறைந்துள்ளது.

அதற்கேற்ப ஒரு கிலோ கிராம் சிவப்பு அரிசியின் சில்லறை விலை தற்போது 150 முதல் 160 ரூபா வரை குறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 ரூபா முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய சில்லறை விலை 1,180 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த மாதம் எண்ணெய் மற்றும் மின்சார மானியங்களை வழங்க அரசாங்கம் முன்னதாக திட்டமிட்டிருந்தது.

நாட்டில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகருத்துள்ளதுடன் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரித்த போக்கும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin