மேற்கு நாடுகள் ஆயுத தாக்குலை எதிர்நோக்க நேரிடும்: ரஷ்ய ஜனாதிபதி சூளுரை

மேற்கு நாடுகள் அணுவாயுதப் போருக்கு முகம் கொடுக்க நேரிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரையினுக்கு ஆயுதங்களை அனுப்பும் மேற்கு நாடுகளின் செயற்பாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி புட்டின் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை மேற்கு நாடுகள் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தமது சொந்த நாட்டு விடயத்தில் மேற்கு நாடுகளின் தலைவர்கள் தலையீட்டின் காரணமான ஏற்படும் ஆபத்தை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் புட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மேற்கு நாடுகளின் எல்லைகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஆயுதங்கள் தம்மிடம் இருப்பாகவும் புட்டின் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இமனுவேல் மக்ரோன் கருத்துத் தெரிவிக்கையில், நேட்டோப் படையில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடுகள் தமது படைகளை உக்ரையனுக்கு அனுப்பும் என கடந்த திங்கள் அன்று குறிப்பிட்டிருந்தார்.

இருந்த போதிலும் இக்கருத்தை ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானிய உள்ளிட்ட இக்கருத்தினை உடனடியாக எதிர்த்திருந்தன.

Recommended For You

About the Author: admin