ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கும் வட கொரியா

உக்ரையினுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு பாரியளவான ஆயுதங்களை வட கொரியா ஏற்றுமதி செய்துள்ளதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த ஜீலை மாதத்திலிருந்து இதுவரை சுமார் 6700 கொள்கலங்களில் மில்லியன் கணக்கான துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வடகொரியா அனுப்பி வைத்துள்ளதாக தென் கொரியா பாதுகாப்பு அமைச்சர் சின் வென் சிக் தெரிவித்துள்ளார்.

ஆயுத வழங்கலுக்கு பதிலீடாக உணவுப் பொருட்களை ரஷ்யா, வடகொரியாவிற்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வட கொரிய ஆயுத தொழிற்சாலைகள் குறைந்த மூலப்பொருள் மற்றும் மின்சார குறைவு காரணமாக தமது வினைதிறனை இழந்துள்ளதாகவும் தென்கொரியா சுட்டிக்காட்டியுள்ளது.

வடகொரியாவின் ஆயுத வழங்கல் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகியன குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள போதிலும் அதனை வட கொரியா மற்றும் ரஷ்யா மறுத்துள்ளன.

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியா 10000 மேற்பட்ட கொள்கலங்களில் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin