இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க, அரசாங்கத்திற்கு உத்தரிவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் சீக்கய நலன்புரி அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது.
மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இடமளிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது விவசாய உற்பத்திகளுக்கு அதிக விலை வழங்கக் கோரி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விவசாயிகள் புதுடெல்லியை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும் விவசாயிகளுக்கான ஓய்வு ஊதியம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த மாநிலங்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு தடை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், பிரதமர் மோடி விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.