யாழில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்: காணொளிகளை அழித்து இராணுவம் அடாவடி

வலி.வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள ஆலயங்களில் இன்று வழிபாடுகள் இடம்பெறும் வேளை ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்திற்குள் செல்வதற்காக பொதுமக்கள் பலாலி வீதிக்கு அருகில் அமைந்துள்ள வசவிளான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று கூடியிருந்தனர்.

அதன்போதே, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான பிரபாகரன் டிலக்சன், சுந்தரம்பிள்ளை ராஜேஸ்கரன், சின்னையா யோகேஸ்வரன் ஆகியோர் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டதோடு, அவர்களின் தொலைபேசியில் உள்ள காணொளிகளும் அழிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம்மட்டுமன்றி, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சார்ந்த நினைவேந்தல்கள், நிகழ்வுகள் என்பன இடம்பெறும் போது அண்மைக்காலமாக செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மற்றும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படும் சம்பங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin