இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 26 வது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை ப்ரசல்ஸில் இடம்பெறவுள்ளது.
கூட்டத்தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்த்தன மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான வெளிவிவகார செயற்பாட்டுக்குழுவின் பிரதி முகாமைத்துவ இயக்குனர் பாவ்லா பம்பாலேனி ஆகிய இணைத்தலைமைகளாக தலைமை தாங்கவுள்ளனர்.
கூட்டத்தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நிதியமைச்சின் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
கூட்டத்தில் இருதரப்பு மற்றும் பலதரப்பு பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசப்படவுள்ளது. மேலும் வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி உதவி, மீன்பிடி, கல்வி, நாடுகடந்த பயங்கரவாதம், ஆட்சிமுறை, மனித உரிமைகள், இந்து-பசுபிக் மற்றும் கடற்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தொடர்பாகவும் பேசப்படவுள்ளது.
கூட்டு ஆணைக்குழுவில்,ஆட்சிமுறை, சட்வாட்சி மற்றும் மனித உரிமை, வர்த்கம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற குழுக்கள் உள்ளடங்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியம், ஜிஎஸ்பி பிளஸ், மற்றும் புதிய ஒழுங்குவிதிகள் குறித்து இலங்கைக்கு விளங்கமளிக்கப்படவுள்ளது.
கடந்தவரும் கொழும்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.