தனது கட்சியின் பிரதமர் வேட்பாளரை அறிவித்தார் இம்ரான் கான்

பாகிஸ்தானில் 101 சுயேச்சை எம்.பிக்களை பெற்றுள்ள இம்ரான்கான் இ ஒமர் அயூப் கானை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்த நிலையில், ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியின்(பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாப்) ஆதரவு பெற்ற 101 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

ஆட்சி அமைப்பதற்கு 133 இடங்கள் தேவை என்ற போதும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் 101 சுயேச்சை எம்.பிக்களை வைத்து இம்ரான் கான், நேற்று பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக ஒமர் அயூப்கானை அறிவித்தார்.

இம்ரான்; கானின் இந்த திடீர் அறிவிப்பு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான், முஸ்லிம் லீக்- பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin