யுத்த நடவடிக்கை காரணமாக பாதிப்படைந்துள்ள தனது நேச நாடுகளுக்கு உதவும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை 95.34 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக சட்டமூலத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில் குறித்த சட்டமூலம் சட்டமாக்கும் வகையில் காங்கிரஸிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இஸ்ரேல், உக்ரைன் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு குறித்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
இதேவேளை இஸ்ரேல் காசா போரானது முற்றுமுழுதாக அமெரிக்காவின் போர் என அமெரிக்க சென்ட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் இஸ்ரேல் காசா பகுதியில் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டுவருகின்றதாகவும், அதற்கு அமெரிக்கா துணை போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட பெர்னி சாண்டர்ஸ், காசாவில் இடம்பெற்றுவரும் மனித அவலத்தினை விபரிக்கு தம்மிடம் வார்த்தைகள் இல்லை எனவும் அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.