பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவடைந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் கடந்துவிட்டன, ஆனால் அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தால் இன்னும் இறுதி முடிவை வழங்க முடியவில்லை.
நேற்று (09) நள்ளிரவு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி சிறையில் உள்ள இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், இம்ரான் கானின் பிடிஐ கட்சி ஆதரவாளர்கள் 57 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (பிஎம்எல்-என்) கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. பிலாவல் புட்டோவின் பிபிபிகட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றது
இதன்படி, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்போது சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நேற்று இரவு தனது ‘எக்ஸ்’ கணக்கு மூலம் தனது கட்சி உறுப்பினர்களிடம் உரையாடினார்.
இந்த காணொளியானது தற்போத சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில், இறுதி முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத பின்னணியில்,
“என் சக பாகிஸ்தானியர்களே, இப்போது எங்களை யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்…
உங்களை கண்டு நான் பெருமைப்படுகிறேன். தேசத்தை ஒன்றிணைத்த கடவுளுக்கு நன்றி.
நவாஸ் ஷெரீப் ஒரு மைனர் (முக்கிய போட்டியாளர்). அவரை எந்த பாகிஸ்தானியரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இப்போது எங்களை யாராலும் தடுக்க முடியாது. இரண்டு வருட அடக்குமுறை மற்றும் அநீதிக்கு மத்தியில், 2/3 அதிகாரத்துடன் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றோம், பாகிஸ்தான் சிந்தாபாஸ்” என்று அவர் AI தொழில்நுட்பத்தின் மூலம் கூறினார்.
இந்த காணொளி தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், இது ஒரு ஏஐ தொழிநுட்ப காணொளி எனவும் தற்போது கூறப்படுகின்றது.