உணவு வீண்விரயத்தை தவிர்க்கும் பிரான்ஸ்

பல ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. பத்து ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய கருத்துக்கணிப்பில் படி இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் பிரான்ஸின் பணவீக்கம் 4.9 வீதத்தை எட்டிய நிலையில், பல குடும்பங்கள் தமது உணவுக்கான வரவு-செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸை தளமாகக் கொண்டியங்கும் செடெலெம் (Cetelem) நுகர்வோர் கடன் நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் படி, 87 வீத குடும்பங்கள் உணவுக் கழிவை மட்டுப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒவ்வொரு குடும்பமும் தமது வரவு – செலவுத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, சுமார் 41 வீதமானவர்கள் 2022 ஆம் ஆண்டில் உணவுக்கான செலவீனத்தை விட 2023 ஆம் ஆண்டில் குறைந்த தொகையை செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனிடையில், வட ஐரோப்பியர்களை விட தென் ஐரோப்பியர்கள் பணவீக்கத்தின் விளைவுகளை அதிகம் உணர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin