யால சரணாலயம் மற்றும் கதிர்காமத்தில் கஞ்சா பயிர்ச்செய்கை

மொனராகலை யால சரணாலய குபுக்கன் ஓயாவிற்கு அருகில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கஞ்சா பயிர்செய்கை ஒன்றை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மொனராகலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி சுற்றிவளைத்தனர்.

இச்சுற்றிவளைப்பின் போது அறுவடைக்கு தயாராக இருந்த 16800 கஞ்சா செடிகளும் விற்பனைக்கு தயாராக இருந்த 1658.40 கிலோகிராம் உலர்ந்த கஞ்சாவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் பொருட்களை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய கதிர்காமம் பிரதேசத்தில் அரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மேலும் 7000 கஞ்சா செடிகளுடன் மூவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்யதுள்ளதுடன், கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: admin