மூன்று மாதத்திற்குள் இந்திய படைகள் வெளியேறும்: மாலைத்தீவு ஜனாதிபதி

2024 மே மாதத்திற்குள் மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் வெளியேறும் என்று அந்நாட்டு ஜனாதிபதி முகம்மது மொய்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சீன ஆதரவாளராக மாலைத்தீவு ஜனாதிபதி அந்நாட்டின் ஜனாதிபதியாக பதிவியேற்றதிலிருந்து இந்திய படைகளை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முகம்மது மொய்சு,

“மாலைத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் அனுமதிக்க முடியாது.

மாலைத்தீவின் மூன்று விமான தளங்களில் இந்திய துருப்புகள் உள்ளன. அவற்றில் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய துருப்புகள் மார்ச் 10ஆம் திகதிக்குள் வெளியேறிவிடுவார்கள்.

மற்ற இரண்டு விமான தளங்களில் உள்ள இந்திய துருப்புகள் மே 10 ஆம் திகதிக்குள் வெளியேறிவிடுவார்கள். இதற்கான ஒப்பந்தம் இந்தியா – மாலைத்தீவு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

இந்நிலையில் முகம்மது மொய்சுவின் இந்த நடவடிக்கைக்கு மாலைத்தீவின் இரு பெரும் எதிர்க்கட்சிகளான எம்டிபி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது எம்டிபியின் 43 உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியின் 13 உறுப்பினர்கள் என 56 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். முகம்மது மொய்சு உரையின்போது 24 உறுப்பினர்கள் மட்டுமே சபையில் அமர்ந்திருந்தனர்.

இது மாலைத்தீவு நாடாளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதியின் உரைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

முகம்மது மொய்சுவின் இந்திய விரோதப் போக்கு தவறானது என கூறி வரும் எடிபி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை, ஜனாதிபதி முகம்மது மொய்சுவை பதவிநீக்கம் செய்ய முயன்று வருகின்றன.

மாலைத்தீவில் 87 இந்திய துருப்புகள் உள்ளன. அவை, அந்நாட்டில் மனிதாபிமான உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றன.

படைகளை இந்தியா திரும்பப் பெற்றாலும், விமானப்படைத் தளங்களை தொடர்ந்து பயன்படுத்த மாலைத்தீவு உடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறி இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin