நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியா தென்கொரியாவுடன் நேற்று பாதுகாப்பு சம்பந்தமான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய தென் கொரியா, சவுதிக்கான தனது ஆயுத விற்பனையை அதிகரிக்கலாம்.
அத்துடன் புரிந்துணர்வு உடன்டிக்கைக்கு அமைய ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சி, அபிவிருத்தி, தயாரிப்பு உள்ளிடட விடயங்களிலும் இரு நாடுகளும் ஈடுபட முடியும்.
இந்த உடன்படிக்கை இரண்டு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன. எனினும் உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வெளியிடப்படவில்லை.
வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய பல நாடுகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு வரும் நிலையில், தென் கொரியாவும் ஆயுத விற்பனையில் முக்கியமான நாடாக மாற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் தென்கொரியா 17 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது.மேலும் தென் கொரிய கடந்த ஒரு தசாப்த காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது ஆயுத விற்பனையை 10 மடங்காக அதிகரித்துள்ளது.