பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான முதலாவது நீர்மூழ்கிக் கப்பலை கொள்வனவு செய்வதற்கான ஒப்புதலை அந்நாட்டு ஜனாதிபதி பேர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் வழங்கியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் மூன்றாம் கட்டமாக நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நீர்மூழ்கி கப்பல் கொள்வனவு செய்யப்பட உள்ளது.
தென் சீனக் கடலில் நிலவி வரும் பிரச்சினைகளில் இருந்து தமது நாட்டின் கடல்சார்ந்த இறையாண்மையை பாதுகாத்து கொள்ள பிலிப்பைன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு, நாட்டின் எல்லை பாதுகாப்பு என்பவற்றின் மாற்றங்கள் நவீனமயப்படுத்தல் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் அடங்கும் என பிலிப்பைன்ஸ் கடற்படை பேச்சாளர் ரோய் டிரினிடாட் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸிடம் மிப்பெரிய கடற்படை இல்லாமல் இருக்கலாம். எனினும் ல் எமது நாட்டின் உரிமைகளையும் இறையாண்மையையும் பாதுகாத்துக்கொள்வதற்கு ஏற்ற கடற்படை எம்மிடம் இருக்கின்றது எனவும் டிரினிடாட் கூறியுள்ளார்.
தென்சீனக் கடல் பகுதியில் நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் சீனாவுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிலிப்பைன்ஸ் இராணுவ நவீனமயமாக்கல் திட்டத்தை அறிவித்துள்ளது.
தனது தனியான கடல் பொருளாதார பிராந்தியத்திற்குள் இருக்கும் தென் சீன கடற்பபை்பை தனது மேற்கு கடற்பரப்பு என பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் ஒன்றுக்கும் மேற்பட்ட நீர்மூழ்கி கப்பல்களை கொள்வனவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ், ஸ்பெயின், தென் கொரியா, இத்தாலி போன்ற நாடுகள் பிலிப்பைன்ஸூக்கு நீர்மூழ்கி கப்பல்களை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.