ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக் கொண்டு தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைகளாக அடிமைபடுத்திக் கொண்டிருக்கின்றார். எனவே, தமிழர்கள் இந்த சிங்கள தேசத்தின் அடிமை சாசனத்தில் இருந்து விடுபடும்வரை தமிழ் மக்களின் உரிமை குரலை எவரும் நசுக்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் சூழுரைப்பு.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவு தூபியில் 2022 நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் த.
சுரேஸ்க்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக அவர் நேற்று மட்டு. நீதவான் நீதிமன்றில் ஆஜராகி பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; இவ்வாறு தெரிவித்தார்.
வடகிழக்கு பூராகவும் எங்கள் மக்களை பிழையாக வழிநடத்தும் செயற்பாட்டிற்கு நீதிமன்றங்களை பொலிசார் பிழையாக வழிநடாத்திக் கொண்டிருக்கின்றனர் உண்மையில் என்னத்திற்கு எதற்கு தடைவிதிக்கவேண்டும் என தெரியாமல் சட்டத்துக்கு முரணான விடையங்களுக்கு வடகிழக்கில் அனுமதி கொடுக்கப்பட்டு எங்களுடைய இறந்த உறவுகளை நினைவு கூர்வதற்கு இந்த தடை உத்தரவை பிறப்பிக்கின்ற செயற்பாடு வடகிழக்கில் வருடா வருடம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதற்காக மாறிமாறி வருகின்ற அரசுக்கள் தங்களின் ஆட்சியை தக்கவைப்பற்காக தங்களுக்கு ஏற்றவகையில் சட்டங்களை பிறப்பித்து தமிழ் மக்களுடைய ஜனநாயக உரிமை குரல் நசிக்கிவருகின்றனர்.
அதனடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக 5 சட்டங்கள் கொண்டுவரப்பட்டது அதில் நிகழ் நிரல் சட்டம் பிரதானமானது அது தமிழ் மக்களின் குரலை நசிக்கும் சட்டமாக இருக்கின்றது.
இந்த ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக் கொண்டு வடகிழக்கு தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்;து அடிமைபடுத்திக் கொண்டிருக்கின்றார் என்பதை எங்கள் மக்களும் சர்வதேசமும் விளங்கி கொள்ள வேண்டும்.
காசாமீது இஸ்ரேல் நடாத்திவரும் இனபடுகொலையை உடன் நிறுத்தவேண்டும் என தென்ஆபிரிக்க சர்வதேச நீதிமன்றில் கோர அந்த அறிக்கையை ரணில் ஆதரிக்கின்றார் என்றால் இவரின் இரட்டை வேடம் சர்வதேச மட்டத்தில் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதை மக்களும் புத்தி ஜீவிகளும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
ஆகவே இந்த சட்டங்கள் எல்லாம் பிறப்பிக்கப்படுவது இந்த ஆட்சியையும் அரசையும் தக்கவைப்பதற்காக 1948 இந்த நாட்டில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறிய பின்னர் சிங்கள ஆட்சியாளர்களிடம் இந்த அதிகாரம் போன பின்னர் சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை தொடர்ந்து அடிமைகளாக அடிமைப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.
எனவே தமிழர்கள் இந்த தீவில் இருந்து அடிமை சாசனத்தில் இருந்து விடுபடும்வரை தமிழ் மக்களின் உரிமை குரலை எவரும் நசுக்கமுடியாது என்பதுடன் எந்தவிதமான தடைகள் வந்தாலும் தொடர்ந்து பயணிப்போம் என்றார்.