பிரான்ஸில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு தடைசெய்யப்பட்ட சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, சில சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் (mineral water) போத்தல் பிராண்டுகளில் குழாய் நீருக்கு பயன்படுத்தப்படும் சுத்திகரிப்பு முறைமையை மாத்திரம் பின்பற்றுவதாக அரசாங்க விசாரணையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிறுவனங்கள் புற ஊதா கதிர் மற்றும் கார்பன் வடிகட்டிகள் மூலம் குடிநீர் சுத்திகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
IGAS அதிகாரசபையின் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாத அறிக்கையின் படி, மினரல் வோட்டர் மீதான பிரான்ஸ் ஒழுங்குமுறைக்கு ஏற்ப 30 வீத பிராண்டுகள் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குறித்த அறிக்கையில், வணிக இரகசியத்தன்மையால் உள்ளடக்கப்பட்ட தரவுகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், போத்தல் நீரின் தரத்துடன் தொடர்புடைய சுகாதார ஆபத்துகள் எதுவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் விதிமுறைகளை மீறி நீர் சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், IGAS அதிகாரசபை ஆய்வு ஆரம்பிக்கப்பட்டதாக பிரான்ஸ் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், குறித்த பிராண்ட் குடிநீர் போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் சந்தேகத்திற்குரிய நடைமுறைகளை பின்பற்றுவதாக விசாரணைகள் தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.