ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் தொழிலை சட்டமாக்குவது குறித்து பேசும் கட்சியினர், கியூபாவில் பாலியல் தொழிழைல தடை செய்ய பிடல் காஸ்ட்ரோ எடுத்த நடவடிக்கையை நினைவில் கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார.
பாலியல் தொழிலை தடை செய்ய தீர்மானித்த நாளில் பிடல் காஸ்ட்ரோவை விஷம் கொடுத்து கொலை செய்யும் சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. எனினும் அவரது தீர்மானத்திற்கு செவிகொடுத்த கூலி கொலையாளிகள் சூழ்ச்சியை காஸ்ட்ரோ முன்னிலையில் தெரியப்படுத்தினர்.
உலகில் அதிகார புரட்சிகளின் மூலம் பெண்கள் தொடர்பில் இப்படியான முடிவுகள் எடுக்கப்பட்ட போதிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், பாலியல் தொழிலை சட்டமாக்கும் நிலைமைக்கு சில கட்சிகள் சென்றுள்ளன.
பாலியல் தொழிலை சட்டமாக்குவது தமது கட்சியின் கொள்கை என இரண்டு பேர் கூறுகின்றனர். மேலும் ஒருவர் அதனை நிராகரிக்கின்றார். இதன் மூலம் அந்த கட்சியின் கொள்கையற்ற அரசியல் தெளிவாகியுள்ளது.
இந்த கொள்கையற்ற அரசியல் காரணமாக முக்கியமான விடயங்கள் சம்பந்தமாகவும் கட்சியின் நிலைப்பாட்டை கூட தெரிவிக்காது ஒதுங்கிக்கொள்கின்றனர்.
இந்த கொள்கையில்லாத தரப்பினர் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கும் போது இந்தியாவின் ஏகாதிபத்தியம் எப்படி வெளியில் வரும்?.
இலங்கை, இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை அந்த கட்சி விரும்புகிறதா இல்லையா என்பதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்