அவுஸ்திரேலிய ஓபன்: பட்டம் வென்றார் சின்னர்

அவுஸ்திரேலிய ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில், ஜானிக் சின்னர், டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசையில் 3 ஆம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா), தர வரிசையில் 4 ஆம் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) உடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றினார்.

இதையடுத்து சின்னர் 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் அடுத்த மூன்று செட்களையும் கைப்பற்றினார்.

இந் ஜானிக் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இது சின்னர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

அவுஸ்திரேலிய ஓபனின் இறுதிப் போட்டிக்கான அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச்சை சின்னர் தோற்கடித்தமையும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin