றோயல் கரீபியன் கப்பல் (Royal caribbean) நிறுவனத்திற்கு சொந்தமான 20 மாடிகளை கொண்ட Icon of the Seas ஆடம்பர சொகுசு கப்பல் நேற்று (27) அமெரிக்காவின் மியாமியில் இருந்து தனது கன்னி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
20 மாடிகளை கொண்ட இந்த கப்பல் சுமார் 8 ஆயிரம் பயணிகள், 2 ஆயிரத்து 350 ஊழியர்கள் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதுடன் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. உலகில் மிகப் பெரிய பயணிகள் கப்பல் என்ற சிறப்பும் இந்த கப்பலுக்கு உள்ளது.
திரவநிலையில் உள்ள இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் Icon of the Seas குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கப்பல்கள் காரணமாக காற்றில் மீத்தேன் வாயு கலக்கும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வெப்பமயமாதல் விளைவுகளை எடுத்துக்கொண்டால் மீத்தேன், கரியமில வாயுவைக் காட்டிலும் மோசமானது என தெரிவிக்கப்படுகிறது