இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை முதல் மாற்றமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதிலும் சீரான வானிலை நிலவக்கூடும். நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடு பனி காணப்படும்.

மத்திய, சப்ரகமுவ,மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹமபாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

Recommended For You

About the Author: admin