36 பேர் இறக்க காரணமான ஜப்பானியருக்கு மரண தண்டனை விதிப்பு

ஜப்பானின் கியோட்டாவில் உள்ள புகழ்பெற்ற Animation studioவுக்கு தீ வைத்து 36 பேர் இறக்க காரணமாக இருந்த ஜப்பானியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கியோட்டோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய இந்த கியோ அனி என்ற Animation studio மீது கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த கொடூரமான தாக்குதல் ஜப்பான் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது 45 வயதாகும் குற்றவாளியான ஷின்ஜி அயோபா கலையகத்தின் கட்டடத்தின் நுழைவாயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் 36 பேர் கொல்லப்பட்டதுடன் 32 பேர் காயமடைந்தனர்.

அயோபாவுக்கும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதுடன் அவர் ஒரு வருடம் சிகிச்சை பெற்றார்.

‘Violet Evergarden’ உட்பட பிரபல தொடர்கள் மூலம் புகழ்பெற்ற அந்த ஸ்டுடியோ மீது அயோபா வெறுப்பு கொண்டிருந்ததாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிறுவனம் தனது நாவலைத் திருடிவிட்டதாகவும் நம்பியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை கியோஅனி மறுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடந்த தீ வைப்புச் சம்பவத்திற்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாகி டிம் கூக் உள்ளிட்ட தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

ஏழு நாடுகள் அடங்கிய ஜி7 அமைப்பில் இடம்பெற்றுள்ள ஏழு நாடுகளில் ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் மாத்திரமே மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

Recommended For You

About the Author: admin