சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ந்து உயர்வு

சுவிட்சர்லாந்தில் வாடகைத் தொகை தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டை விடவும் கடந்த 2023ஆம் ஆண்டில் வேகமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது.

கடந்த ஆண்டில் மாத்திரம் 4.7 வீதமாக வாடகைத் தொகை உயர்வடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டின் பின்னர் அதிகளவு தொகை வாடகை உயர்வடைந்த ஆண்டாக இது கருதப்படுகின்றது.

85% சுவிஸ் நகராட்சிகளில், 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நடுத்தரத் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை முந்தைய ஆண்டை விட 3% அதிகரித்துள்ளன.

வாடகை சந்தையானது தொடர்ச்சியாக அதிகரிப்பினை பதிவு செய்து வருவதால் இங்கு வாழும் நடுத்தர மற்றும் புலம்பெயர் மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் பல்வேறு நகரங்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து தமிழர்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழ்க்கின்றனர். பெரும்பாலானவர்கள் இங்கு வாடகை வீடுகளிலேயே தங்கியுள்ளனர்.

ஏற்கனவே, சுவிட்சர்லாந்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுகளில் கொவிட் தொற்றுக்கு பின்னர் அதிகரித்துள்ள பின்புலத்தில் தற்போது வாடகை கட்டணங்களும் அதிகரித்து வருவதால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதால் இங்கு வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

Recommended For You

About the Author: admin