வங்குரோத்து அடைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 17 மாதங்களில் 18 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளால் நாடு அழிவை நோக்கி கொண்டு செல்லப்படுவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் துன்ப,துயரங்களை கவனத்தில் கொள்ளாது நாட்டின் தலைவர் மக்களின் பணத்தில் வெளிநாடு செல்கிறார்.
வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் இந்த பயணங்களுக்கு போதவில்லை என்பதால், மேலும் 200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது
நாட்டை சிங்கப்பூராக மாற்ற போவதாகவும் கயிற்று பாலத்தில் சென்று நாட்டை கட்டியெழுப்ப போவதாகவும் கூறினாலும் வரிசைகளில் இறந்த, தரமற்ற மருந்து காரணமாக உயிரிழந்த மற்றும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு இதுவரை நீதியும்,நியாயமும் கிடைக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் நாடு வங்குரோத்து அடைந்ததால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்படும்.
தற்போதைய அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் காரணமாக நாடு அழிந்துள்ளது.
உற்ற நண்பர்களின் முதலாளித்துவ கொள்கையை பின்பற்றும் அரசாங்கத்தை மக்களின் பலத்தின் மூலம் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.