2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 7% ஆக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு மற்றும் ஏனைய வெளிப்புறக் காரணிகளால் பணவீக்கம் இம் மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
வட் (திருத்தம்) சட்டமூலம் கடந்த டிசம்பர் 11 அன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
2024 ஜனவரியில் நடைமுறைக்கு வரும் வகையில் வட் வரி 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.