பாலியல் தொழிலை சட்டமாக்கும் கொள்கை தேசிய மக்கள் சக்தியிடம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் சமூகத்தில் கௌரவமான பங்காளிகளாக பெண்கள் மாற்றப்படுவார்கள்.
அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகளின் அடிப்படையில்,உடலை விற்க நேரிடாது. பொருளாதாரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்புவதே எமது கட்சியின் கொள்கை.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உடலை விற்கும் பெண்கள் எமது நாட்டில் உள்ளனர். அவர்கள் இதனை விரும்பி செய்யவில்லை. பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் அவர்களை அந்த இடத்தை நோக்கி தள்ளியுள்ளது.
சகல பெண்களும் கௌரவமாக வாழும் நாட்டை உருவாக்குவதே எமது கொள்கை. உடலை விற்பது கௌரவம் அல்ல என்பதை அனைவரும் அறிவோம் எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும் என அந்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இது சமூகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.