அரச பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடநூல்!

2023 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள அரசாங்க பாடசாலைகளின் மாணவர்களுக்கு கல்வி அமைச்சகம் இலவச பாடப்புத்தகங்களை வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இந்த நோக்கத்திற்காக 16,483 மில்லியன் ஒதுக்கியுள்ளதோடு அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் 45 சதவீத பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஐம்பத்தைந்து வீதமான பாடப்புத்தகங்கள் தனியார் துறையினரால் அச்சிடப்படும் என குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். பாலசூரிய கூறியுள்ளார்.

டபிள்யூ.எம். பாலசூரிய குறிப்பிட்ட விடயம்

குருநாகல் மாகாண கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருநாகல் மாவட்ட பாடசாலை அதிபர்கள் கூட்டத்தில் பாலசூரிய கூறியதாவது “அடுத்த கல்வியாண்டு 2023 க்கு முன்னதாக மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடுவதை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ” என்று கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor